இவர் 4 வது இடத்தில் தான் அணியில் ஆடவேண்டும்..! அடம் பிடிக்கும் முன்னாள் கேப்டன்..!
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் நான்காவது இடத்தில் ஆட தான் வேண்டும் என்றும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய போது உலக கோப்பை தொடரில் ஆடும் லெவன் அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அவர் நான்காவது இடத்தில் தான் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை அவரது திறமையை இன்னும் சற்று உயர்த்தப்பட வேண்டி உள்ளது.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அவர் நன்றாக கீப்பிங் செய்ய வேண்டும். எல்லோரும் நோக்கி கொண்டிருக்கும் 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடவில்லை என்றால் கண்டிப்பாக நம் அனைவருக்குமே ஒரு ஏமாற்றம் தான்.மேலும் உலக கோப்பை வெல்ல அனைத்து விதமான திறமை மற்றும் உத்திகளும் இந்தியாவிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.