ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த கட்சியின் அரசியல்வாதியா?
ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோர் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக வெளியான செய்திதான் தற்போதைய கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அவர் அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் கூட நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது.
நிச்சயதார்த்தம்
ஆங்கில ஊடகங்கள் வெளியீட்டு வரும் செய்தி தகவலின் படி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோர் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர் எனவும், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட சரியான தேதி இன்னும் வெளிவரவில்லை நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யார் இந்த பிரியா சரோஜ்?
பிரியா சரோஜ் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக தொண்டு செய்பவராக இருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர் Amity பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (LLB) முடித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு, மச்சிலிஷர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னணி BJP வேட்பாளரை தோற்கடித்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை துஃபானி சரோஜ், மூன்று முறை எம்பி பதவியிலும் தற்போதைய எம்எல்ஏ பதவியிலும் உள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரரும் அரசியல் எம்பியும் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இது பற்றி ரிங்கு சிங் தரப்பு அல்லது பிரியா சரோஜ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.