இந்திய ஏ அணியில் ரிங்கு சிங்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையிலான 2-வது போட்டி ஜனவரி 24-ஆம் தேதி(நாளை) முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளை அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக உள்ளார். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டிக்கான அணியில் ரிங்கு சிங்கை பிசிசிஐ ஏற்கனவே சேர்த்திருந்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.
#INDvsENG : விராட் கோலி இடத்துக்கு அவர் சரியா இருப்பாரு! ஆகாஷ் சோப்ரா கருத்து!
ரிங்கு சிங் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இந்தியா ஏ அணி:
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ரஜத் படிதார், சர்பராஸ் கான், திலக் வர்மா, குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார், அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, உபேந்திர யாதவ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? NEWS ????
Rinku Singh added to India ‘A’ squad for 2nd four-day match against England Lions.
Details ????https://t.co/rzPpDxD0OB
— BCCI (@BCCI) January 23, 2024