அஸ்வினை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அஸ்வினை புகழ்ந்து கூறியுள்ளார். இதில் செய்ய ரிக்கி பாண்டிங் இது குறித்து கூறுகையில் ” எங்கள் அணியில் இறுதி ஓவர்களில் டாம் கரண் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் எளிதான பந்துகளை கொடுத்துவிட்டார்கள். இது எதிர் அணிக்கு சாதகமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்கள் எடுக்கவில்லை என்றாலும் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். போட்டியில் மிகவும் சிறப்பாக அஸ்வின் பந்து வீசினார். ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை அவருக்கு எனது பாராட்டு ” என்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…