தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட இஷான் கிஷன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இஷான் கிஷான் விளையாடி வருகிறார்.
நேற்றைய போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 146 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து இஷான் கிஷான் அணிந்து இருந்த ஹெல்மெட்டில் அடித்தது. இதையடுத்து, இஷான் கிஷான் உடனடியாக ஹெல்மெட்டை கழற்றி தரையில் அமர்ந்தார். பின்னர், அடுத்த சில நிமிடங்களில் இஷான் கிஷான் தனது விக்கெட்டை இழந்தார்.
போட்டி முடிந்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக இஷான் கிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஐசியூவில் வைக்கப்பட்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இஷான் கிஷன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், இஷான் கிஷன் பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்.
இன்று இரவு நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இஷான் இல்லாவிட்டால் மயங்க் அகர்வாலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…