இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் டிசம்பர் 17-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26 -ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது போட்டி ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாட உள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டி20 தொடருக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன் ), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ( விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…