ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு! நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்.!
நியூசிலாந்து தொடரில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன், பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல்.
டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விவிஎஸ் லக்ஷ்மன், ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் மற்றும், இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். நவ-18 ஆம் தேதி தொடங்கவுள்ள டி-20 தொடருக்கு ஹர்டிக் பாண்டியா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & W), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (W), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
ஒருநாள் இந்திய அணி: ஷிகர் தவான் (C), ரிஷப் பந்த் (VC & W), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (W.), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சிங் யாதவ், அர்ஷ்தீப் சிங் யாதவ் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.