டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு வங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் குரூப் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த சுற்றின் கடைசி போட்டியில் இந்திய இன்று கனடா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதன், பிறகு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ்-இல் சூப்பர் 8 சுற்று முழுவதும் நடைபெற இருக்கிறது. எனவே. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு செல்ல இருக்கிறது. இந்த சூழலில் தான் அணியில் 4 மாற்று வீரர்களில் இருக்கும் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை இருவரை மட்டும் இந்தியாவுக்கு செல்லுங்கள் என்று பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அணியில் இருக்கும் மற்ற இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அஹ்மது இருவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்திய அணியுடன் செல்ல இருக்கிறார்களாம். 4 மாற்று வீரர்கள் வேண்டாம் 2 வீரர்கள் போதும் எனவே, சூப்பர் 8 சுற்றுக்கு சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் தேவையில்லை என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து, அதிகாரப்பூர்வமாக இன்னும் பிசிசிஐ எந்த தகவலையும் அறிவிக்கவில்லை, இருப்பினும் நம்பத்தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதனை பற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். ஒருவேளை கேப்டன் ரோஹித் சர்மா அல்லது விராட் கோலிக்கு காயம் ஏதேனும் இருந்தால், ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…