ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு மாற்று வீரர்கள் அறிவிப்பு!
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு மாற்று வீரர் அறிவிப்பு.
டாடா இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023ம் ஆண்டின் 16-வது சீசனில் ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோரை எடுத்துள்ளனர்.
விக்கெட் கீப்பர்-பேட்டராக இருக்கும் அபிஷேக் போரல், பெங்கால் அணிக்காக 3 லிஸ்ட் ஏ மற்றும் பல டி20 போட்டிகள் தவிர 16 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக விளையாடியுள்ள சந்தீப் வாரியர் இதுவரை 68 டி20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார், 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அபிஷேக் போரலை டெல்லி அணி ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. சந்தீப் வாரியரை மும்பை அணி 50 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். இருப்பினும், காயம் காரணமாக அவர் ஐபிஎஸ் தொடரில் இருந்து விலகினார். மறுபக்கம், பும்ராவுக்கு சமீபத்தில் முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரும் ஐபிஎஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய வீரர் எடுக்கப்பட்டுள்ளது.