அஸ்வின் நீக்கம்..! பயிற்சியாளர் ,கேப்டன் சேர்ந்து எடுத்த முடிவு – ரஹானே..!
இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தற்போது இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின் , ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா , ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர்.
அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறாததால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தமுறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றவர் அஸ்வின்.
பேட்டிங் ,பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக தனது திறமையையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஆடும் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாத ஏன் என்பது துணை கேப்டன் ரஹானே கூறினார். அவர் கூறுகையில் , ரோகித் , அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறாதது வருத்தமாக உள்ளது.
இந்த மைத்தனத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஜடேஜா சிறப்பாக பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அவர் அஸ்வினுக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். மேலும் ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால் பேட்டிங் மற்றும் பந்து வீசும் ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த முடிவை பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்த எடுத்தார்கள் என கூறினார்.