ஒருநாள் கிரிக்கெட்டை மீட்டெடுங்கள்; சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை.!

Default Image

ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக மாற்ற, புதிய பரிமாணத்திற்கு மாற்ற சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.

Sachin rt

சச்சின் டெண்டுல்கர்:                                                                        வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் மகத்தானவை. சச்சினின் ரெகார்ட்களும் இன்று வரை பேசப்படுகிறது.

odi interst

ODI கிரிக்கெட்:                                                                                  கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் சலிப்பூட்டும் விதமாக மாறிவருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் 15 முதல் 40 ஓவர்கள் வரை போர் அடிக்கும் விதமாக இருப்பதாக கூறிய சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

புதிய விதிகள்:                                                                                              இரண்டு புதிய பந்துகளின் பயன்பாடு மற்றும் நவீன கால ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் ஆட்டத்தை மேலும் சலிப்பூட்டும் மற்றும் மிகவும் கணிக்கக்கூடியதாக மாற்றுகிறது என்று டெண்டுல்கர் கருத்து தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய விதிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக்குகிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.

sachin bowling1

டெஸ்ட் போல் மாற்றுங்கள்:                                                                      இதற்காக டெண்டுல்கர், ஒருநாள் கிரிக்கெட்டையும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல் பிரித்து விளையாடலாம் என கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 பகுதிகளாக இருப்பதுபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 25 ஒவர்களாக இரு பகுதிகளாக விளையாடவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் தற்போது இருக்கும் புதிய விதிகளால் ஸ்பின்னர்களும் பாதிக்கப்படுவதாக கூறினார். இது குறித்து கூறிய சச்சின், தானும் ஒரு ஸ்பின்னர் என்பதால் அவர்களது மனநிலை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்