GGTWvRCBW : முதல் ஆட்டத்திலேயே சம்பவம் செய்த பெங்களூரு! பெண்கள் ஐபிஎல்-இல் 200+ டாப் சேசிங
நேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற WPL முதல் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.

வதோரா : ஐபிஎல் போன்று நடைபெறும் பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
முதல் இன்னிங்ஸ் :
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடந்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் விளாசி 79 ரன்கள் அடித்தார். பெத் மூனி 56 ரன்களும், டியாண்ட்ரா டாட்டின் 25 ரன்களும் எடுத்தனர்.
200+ டார்கெட் :
இதனை அடுத்து 20 ஓவர்களில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. கடந்த 2 சீசன்களிலும் 200க்கு மேல் உள்ள ரன் இலக்குகளை எந்த அணியும் சேஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் ஆரம்பம் முதலே அதிரடி கட்ட வேண்டிய RCB, பவர் பிளேயிலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் (9 ரன்கள்) விக்கெட்டை இழந்தது. டேனியல் வயட்-ஹாட்ஜூம் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
அதிரடி RCB :
ஆனால், அதன் பிறகு களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 34 பந்துகளில் 57 ரன்கள் விளாசி சேசிங்கிற்கு அடித்தளம் அமைத்தார். ரக்வி பிஸ்ட் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசி 64 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வெற்றிக்கு வழிவகுத்தார். உடன் கனிகா அஹுஜா கைகோர்த்து 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இதன் மூலம் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதுவரை பெண்கள் பிரீமியர் லீக்கில் எந்த அணியும் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்ற சாதனையை படைத்தது RCB. ஆட்ட நாயகியாக ரிச்சா கோஷ் தேர்வு செய்யப்பட்டார்.