RCBvsUPW : முதல் வெற்றியை பதித்த பெங்களூரு அணி..! 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் யூபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.
136 ரன்கள் என்ற இலக்கில் பெங்களூரு அணியின் சோஃபி டெவின் மற்றும் ஸ்மிருதி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்மிருதி மந்தனா பெவிலியன் திரும்பியதையடுத்து சோஃபி டெவின் ஆட்டமிழந்தார். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் ரிச்சா கோஷ் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். 18 ஓவர்களில் 136 ரன்களை அடித்த பெங்களூரு அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் யூபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கனிகா அஹுஜா 46 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும், ஹீதர் நைட் 24 ரன்களும் குவித்துள்ளனர். யூபி வாரியர்ஸ் அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக கனிகா அஹுஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.