RCBvsUPW : அதிரவைத்த அலிசாவின் அசத்தல் பேட்டிங்..! விக்கெட் இழப்பின்றி வெற்றியை தட்டியது யூபி வாரியர்ஸ்..!
யூபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வெற்றி பெற்றது
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 8-வது போட்டியில் யூபி வாரியர்ஸ் பெண்கள் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, யூபி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.3 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்துள்ளது.
139 ரன்கள் என்ற இலக்கில் யூபி வாரியர்ஸ் அணியின் அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். யூபி வீராங்கனைகளை விக்கெட் எடுக்கும் பெங்களூர் அணியின் முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். அலிசா ஹீலி அரைசதம் அடித்து அணிக்கு பெருமை சேர்த்தார்.
The @UPWarriorz skipper has been nothing short of class tonight!@ahealy77 moves into the 9️⃣0️⃣s ????
Follow the match ▶️ https://t.co/aLy7IOLeMX#TATAWPL | #RCBvUPW pic.twitter.com/vog3Md30Qz
— Women’s Premier League (WPL) (@wplt20) March 10, 2023
13 ஓவர்களில் 139 ரன்களை அடித்த யூபி வாரியர்ஸ் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வெற்றி பெற்றது. யூபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 96* ரன்களும், தேவிகா வைத்யா 36* ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.