RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!

Published by
பாலா கலியமூர்த்தி

52-வது லீக் போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 

ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது.

அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் அடித்துள்ளார். நட்சத்திர வீரர்களான கோலி 7 மற்றும் டி வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சை பொறுத்தளவில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 121 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர், விருத்திமான் சஹா களமிறங்கினர். வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மணிஷ் பாண்டே 26 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து விருத்திமான் சஹா சற்று நிதானமாக ஆடி, 32 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதையடுத்து கேன் வில்லியம்சன், இசுரு உதனா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 26 ரன்களில் அடித்து, 14.1 ஓவரில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். பந்துவீச்சை பொறுத்தளவில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 13 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன், நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

7 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

8 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

8 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

9 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

10 hours ago