RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
52-வது லீக் போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது.
அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் அடித்துள்ளார். நட்சத்திர வீரர்களான கோலி 7 மற்றும் டி வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சை பொறுத்தளவில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 121 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர், விருத்திமான் சஹா களமிறங்கினர். வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மணிஷ் பாண்டே 26 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து விருத்திமான் சஹா சற்று நிதானமாக ஆடி, 32 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து கேன் வில்லியம்சன், இசுரு உதனா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 26 ரன்களில் அடித்து, 14.1 ஓவரில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். பந்துவீச்சை பொறுத்தளவில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 13 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன், நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.