RCBvsMI : அசத்தல் பேட்டிங்..மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Default Image

மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்றது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

RCBvMI

126 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் – யாஸ்திகா பாட்டியா ஜோடி 53 ரன்கள் குவித்தது. ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா ஆட்டமிழந்த நிலையில் அமெலியா கெர் களமிறங்கினர். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் அமெலியா கெர் மற்றும் அமன்ஜோத் கவுர் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

RCBvMI 1

16.3 ஓவர்களில் 129 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட்டை இழந்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 31* ரன்களும், யாஸ்திகா பாட்டியா 30 ரன்களும், ஹேலி மேத்யூஸ் 24 ரன்களும் குவித்துள்ளனர். பெங்களூர் அணியில் கனிகா அஹுஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக அமெலியா கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA