RCBvsGG : பேட்டிங்கில் அசத்திய பெங்களூரு அணி..! திணறிய குஜராத்..8 விக்கெட் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றி..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வென்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது.
189 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஸ்மிருதி மந்தனா-சோஃபி டெவின் ஜோடி 125 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்த நிலையில் சோஃபி டெவின் சதம் அடிக்கும் வேலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு எல்லிஸ் பெர்ரி மற்றும் ஹீதர் நைட் களமிறங்கினர். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஹீதர் நைட் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
15.3 ஓவர்களில் 189 ரன்களை அடித்த பெங்களூர் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சோஃபி டெவின் 99 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 37 ரன்களும், ஹீதர் நைட் 22* ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக சோஃபி டெவின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.