RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 163 ரன்கள் குவித்துள்ளது.

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட், விராட் கோலி சரவெடியாக தான் வெடிப்போம் என்பது போல விளையாடினார்கள். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் பிலிப் சால்ட் ஸ்டாக் வீசிய பந்தை சிக்ஸர் பவுண்டரி என விளாசினார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக 3-வது ஓவர்கள் முடிவிலே 60 ரன்களை கடந்துவிட்டது.
அந்த சமயம் தான் பெங்களூர் அணி தொடர்ச்சியாக விழுவதற்கு ஒரு அடித்தளமாக சால்ட் விக்கெட் விழுந்தது. சால்ட் 37 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், அவருக்கு அடுத்ததாக தேவ்தத் படிக்கல் 1, விராட் கோலி 22, லியாம் லிவிங்ஸ்டோன் 4, ஜிதேஷ் சர்மா 3 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
விக்கெட் விழுந்த சமயத்தில் நிதானமாக விளையாடினாள் தான் கொஞ்சமாவது ரன்கள் குவிக்க முடியும் என்ற நோக்கத்தோடு க்ருனால் பாண்டியா நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார். அதன்பின் அவரும் அதிரடி காட்ட நினைத்து 18 ரன்களுடன் வெளியேறினார். கடைசி நேரத்தில் டிம் டேவிட் களத்தில் நின்ற காரணத்தால் நல்ல ரன்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. அவரும் கடைசி நேரத்தில் அணியை தோளில் சுமந்துகொண்டு சிக்ஸர், பவுண்டரி என விளாசி அசத்தினார்.
அவருடைய அதிரடி ஆட்டம் (டிம் டேவிட் 37 *)காரணமாக பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவர் களத்தில் நின்ற டேவிட் 16 ரன்கள் எடுத்து அசத்தினார். பெங்களூர் அணி 163 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்யவிருக்கிறது. மேலும், டெல்லி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் சிறப்பாக பந்துவீசி அதிகபட்சமாக விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.