RCBvKKR: 3 வருட பழியை தீர்த்த “கிங் கோலி”.. மகிழ்ச்சியில் பெங்களூர் ரசிகர்கள்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியில் கேப்டன் கோலி, தனது 3 வருட பகையை தீர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39 ஆம் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அணியின் மோசமான ஸ்கோர் இதுதான்.
மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்ப்பிளே ஓவரில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ரன்களும் இதுதான். (17 ரன்கள் மட்டுமே எடுத்தது). இது, ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது. இதனை பெங்களூர் அணி, தூசி ஊதுவது போல 13.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், தனது 3 வருட பகையும் இந்த போட்டியின் மூலம் தீர்த்துள்ளார்.
அந்தவகையில், 2017ஆம் ஆண்டு கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து 131 ரன்கள் குவித்தது. எளிதாக வெல்லும் நோக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, கொல்கத்தா அணியில் பந்துவீச்சை தாங்கமுடியாமல் 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இது, ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இந்த பழியை தீர்க்கும் நோக்குடன் கோலி பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார். 2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் பெங்களூர் அணி மிக மோசமாக ஆடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், 2020-ல் சிறப்பாக செயல்பட்டு பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புடன் இருக்கிறது,