#IPL2022: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி.. ஆனாலும் “வெயிட்டிங் லிஸ்ட்”!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டு பிளெஸிஸ் களமிறங்கினார்கள்.
இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுக்க, அணியின் ஸ்கொர் உயர தொடங்கியது. இவர்களே கூட்டணி போட்டு போட்டியை முடிப்பார்கள் என்று எதிர்பார்த்த பொழுது 44 ரன்கள் எடுத்து டு பிளெஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியான ஆடதொடங்கினார். சிறப்பாக ஆடிவந்த விராட் கோலி 73 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, 40 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.
இறுதியாக பெங்களூர் அணி, 18.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 170 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி, பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது. அந்தவகையில் 69-வது போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணியின் பிளே ஆப்ஸ் கனவு வென்றுவிடும்.