ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 54-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாப் டூ பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேன் வில்லியம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினார்கள். இவர்கள் இருவரும் டக் அவுட் ஆக, ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி – ஐடென் மார்க்ரம் கூட்டணி, அணியை சரிவில் இருந்து மீட்க அதிரடியாக விளையாடினார்கள்.
இதில் ஐடென் மார்க்ரம் 21 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் 19 ரன்கள் எடுத்தும், ஜெகதீசா 2 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த ராகுல் திரிபாதி அரைசதம் அடித்து 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை தாங்கமுடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி, 19.2 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் அடித்து, 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…