ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 31-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள்.
சிறப்பான தொடக்கத்தை கே.எல்.ராகுல் கொடுக்க, மறுமுனையில் 3 ரன்கள் மட்டுமே அடித்து டி காக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் க்ருனால் பாண்டியா களமிறங்கினார். இவர் கே.எல்.ராகுலுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ரன்கள் எடுத்து ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்து வெளியேற, அதிரடியாக ஆடிவந்த க்ருனால் பாண்டியா 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஸ்டாயினிஸ் 24 ரன்கள் எடுத்தும், 16 ரன்கள் எடுத்து ஜேசன் ஹோல்டர் தங்களின் விக்கெட்களை இழந்தார்கள். இறுதிவரை போராடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…