#IPl2022: 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

Published by
Surya

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.

இதில் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மறுமுனையில் டேவிட் வார்னர் வெளுத்து வாங்க, 66 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 14 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரிசப் பந்த் சிறப்பாக ஆட, மறுமுனையில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. அதேபோல டெல்லி அணி, 8-ம் இடத்திற்கு பின்னேறியது.

Published by
Surya

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

1 hour ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

2 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

3 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

4 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

4 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

5 hours ago