ஆர் சி பி கப் ஜெயிக்கும் – டிவில்லியர்ஸ் கணிப்பு
ஐபிஎல் தொடரில் பிரபல அணியான ஆர் சி பி இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டால், அதற்கு பின் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையைத் தட்டி செல்லும் என பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என கணித்திருந்தார்.
ஆர் சி பி அணி சிறந்த வீரர்கள், வலிமையான பேட்டிங் வரிசை கொண்டிருந்தாலும், இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.