இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.
இன்று நடைபெறும் 31- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,ஷார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கனவே மோதியுள்ளது.ஆனால் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்தது.அபாரமாக விளையாடிய ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் அடித்தார்.இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே அடித்தது.பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள் பின்ச் 20 ரன்கள் ,வில்லியர்ஸ் 28 ரன்கள் ,கோலி 1 ரன்கள் மட்டுமே அடித்தனர்.பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஆனால் புள்ளிகள் பட்டியலை பொருத்தவரை பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் 3 -வது இடத்தில் உள்ளது.7 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 5 வெற்றிகள் , 2 தோல்வி அடைந்துள்ளது.பெங்களூர் அணியின் 2 தோல்விகள் ஓன்று பஞ்சாப் அணியுடன் ஆகும்.மற்றொன்று டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டி ஆகும்.இந்த போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 137 ரன்கள் மட்டுமே அடித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் அணி 7 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் ஒரு வெற்றி , 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.பெங்களுர் அணியுடன் கிடைத்த வெற்றியை பஞ்சாப் அணிக்கு மற்ற அனைத்தும் போட்டிகளும் தோல்வி தான்.கடைசியாக கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. ராகுல்,அகர்வால் சிறப்பாக விளையாடியும் , அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக விளையாடவில்லை.ஆகவே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…