RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போது RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
RCB அணி 8 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளாகும். இதனால் சொந்த மண்ணில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. தங்கள் தோல்வி முகத்தில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும் விளையாட உள்ளதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே கூறப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் களத்தில் இறங்க உள்ளது பெங்களூரு அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
ரஜத் படிதார் தலைமையிலான அணியில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
ரியான் பராக் தலைமையிலான அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர். சஞ்சு சாம்சன் இப்போட்டியில் விளையாடவில்லை.