RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!
குஜராத் அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது. குறிப்பாக விராட் கோலி, படிக்கல், ரஜத் படிதர், பிலிப் சால்ட் ஆகிய வீரர்கள் 7 வது ஓவருக்குள் அவுட் ஆகி வெளியேறினர்.
விராட் கோலி 7 ரன்னிலும், படிக்கல் 4 ரன்னிலும், பிலிப் சால்ட் 14 ரன்னிலும், கேப்டன் ரஜத் படிதர் 12 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். ஜிதேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அதிகபட்சமாக லயம் லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
குர்னால் பாண்டியா 5 ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட உள்ளது.
குஜராத் அணி சார்பாக முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷத் கான், இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025