RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் RCB வீரர் விராட் கோலி 7 ரன்னில் அவுட் ஆகினார். இதுவே குஜராத் அணிக்கு எதிராக விராட் கோலி எடுத்த குறைவான ரன் ஆகும்.

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரு அணி முதல் போட்டியியிலேயே நடப்பு சேம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலியே வீழ்த்தியது. அடுத்து சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் தனது முந்தைய போட்டியில் வெற்றி பெற்று நல்ல உத்வேகத்துடன் உள்ளது. சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் குவியும் வாய்ப்பு உள்ளது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் RCB நட்சத்திர வீரர் விராட் கோலி வந்த வேகத்தில் 1 பவுண்டரி மட்டும் அடித்து 7 ரன்னில் அர்ஷத் கான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதற்கு முன்னர் 2022 முதலே குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
2022 ஐபிஎல் சீசனில் 58 மற்றும் 73 ரன்கள் விளாசினார். 2023 ஐபிஎல் சீசனில் 101 (நாட் அவுட்) சதம் விளாசினார். 2024 ஐபிஎல் சீசனில் 70 (நாட் அவுட்) மற்றும் 42 விளாசினார். சொற்ப ரன்களில் இதுவரை குஜராத் அணியிடம் கிங் கோலி அவுட் ஆனதில்லை எனக் கூறப்பட்ட நிலையில் இன்று 7 ரன்னில் அவுட் ஆகியுள்ளார் விராட் கோலி.