RCB vs CSK:இன்று 35 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2021 இன் 35 வது லீக் போட்டியில் இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது.
இதற்கிடையில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்து சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. இதனால்,சென்னை அணி நம்பர் -1 இடத்திற்கு வர முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை இதுவரை எட்டு போட்டிகளில் 6 வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில உள்ளது.மறுபுறம், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எட்டு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும்,கொல்கத்தாவிடம் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு விரைவில் வெற்றிப் பாதையில் திரும்ப வேண்டும்.எனவே,இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட ஆர்சிபி XI அணி:
விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், கேஎஸ் பாரத் (wk), ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் மற்றும் கைல் ஜேமிசன்.
கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் XI அணி:
ஃபாஃப் டு பிளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (c), அம்பதி ராயுடு, சாம் கர்ரன், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…