IPL2024 ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.
ஐபிஎல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு போட்டி அதிலும் முதல் போட்டிய சென்னை அணி விளையாடுவதால் நாளை நடைபெற உள்ள போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் தற்போது நாளை இரண்டு அணிகளிலும் விளையாட உள்ள எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ( Probable Playing XI) குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்(C) , ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி அல்லதுசமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முஸ்தாபிசுர் ரஹ்மான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
ஃபாஃப் டு பிளெசிஸ் (c), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (wk), மஹிபால் லோம்ரோர், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ், கர்ன் சர்மா, ஆகாஷ் தீப்
இதற்கு முன்னதாக சென்னை அணியும் பெங்களூர் அணியும் 31 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 20 போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற்று இருக்கிறது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்று இருக்கிறது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…