#RCB v DC: ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் அதிரடி… 7 விக்கெட் வித்தியாத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து.
டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 48 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்திருந்தனர். பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் முகமது சிராஜ் மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
தொடக்க வீரர்களான தேவதூத் படிக்கல் டக் அவுட்டாக, கேப்டன் விராட் கோலி 4 ரன்னில் வெளியேறினார். இதன்பின் ஏபி டிவில்லியர்ஸ் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஸ்ரீகர் பாரத் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 32 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். இதன்பின் ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரீகர் பாரத் சிக்ஸ் அடித்து அதிரடியான வெற்றியை பெங்களூருக்கு பெற்று தந்தார். இதனால் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஸ்ரீகர் பாரத் 52 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார். மறுபக்கம் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியால் பெங்களூர் அணி புள்ளி பட்டியலை 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
டெல்லி அணி பந்துவீச்சை பொறுத்தளவில் அன்ரிச் நார்ட்ஜே 2, அக்சர் படேல் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 மட்டுமே இழந்து 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
புள்ளி பட்டியலில் டெல்லி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் மற்றும் கொல்கத்தா 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து, ஆகிய நான்கு அணிகளும் குவாலிபர் ஆகியுள்ளது.