ஆர்.சி.பி அணியில் அதிரடி மாற்றம் ! அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்
ஆர்.சி.பி அணி தனது புதிய லோகோவை மாற்றியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதனால் அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் வருடந்தோறும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் வெற்றி நாயகனாக உலாவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் மட்டும் வெற்றியை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தொடரில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆர்.சி.பி வீரர்கள் தற்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
Embodying the bold pride and the challenger spirit, we have unleashed the rampant lion returning him to the Royal lineage.
New Decade, New RCB, and this is our new logo #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/bdf1kvXYUl
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 14, 2020
திடீரென்று ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் புரொபைல் போட்டோ நீக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியளிந்த அந்த அணியின் கேப்டன் விராட் கோலி ,சாஹல்,வில்லியர்ஸ் போன்றோர் ஆர்.சி.பி சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த படங்கள் எங்கே? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் தனது புது லோகோவை வெளியிட்டுள்ளது.இந்த லோகோவில் சீரும் சிங்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.