அடிமேல் அடி வாங்கும் ஆர்சிபி…! தோல்வியை அடுத்து தொடரும் அபராதம்..!

Default Image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு தாமதமானதால் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரில் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை தாமதப்படுத்தி ஸ்லோ ஓவர் ரேட்டை எடுத்ததால் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

RCB fined

அதே நேரத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், ஐபிஎல் போட்டியின்  விதிகளை மீறியதற்காக கண்டிக்கப்பட்டார். ஐபிஎல் விதிகளின்படி, போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள் மற்றும் மைதானத்தில் உள்ள பிற உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்.

AveshKhan

ஆனால், லக்னோ அணிக்காக பேட்டிங் செய்ய களமிறங்கிய அவேஷ் கான், ஆட்டத்தின் கடைசிப் பந்து வீச்சில் வெற்றிக்கான ரன்னை எடுத்து, தனது ஹெல்மெட்டை தரையில் வீசி எறிந்தார். இதனால் போட்டியின்  விதிகளை மீறியதற்காக அவேஷ் கான் கண்டிக்கப்பட்டார்.

rcblsg 23ipl

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் 213 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் குவித்து, 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னோ அணி நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் உள்ளது. ஆர்சிபி அணி, மூன்று ஆட்டங்களில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் மொத்தம் 2 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்