RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய நாள் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs RR - IPL 2025

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி RCB-யின் சொந்த மைதானமான் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது பெங்களூரு அணி.

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிலிப் சால்ட் 26 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள் அடித்து 70 ரன்கள் விளாசினார்.

படிக்கல் 27 பந்தில் 50 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் RCB அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இறுதியில் டிம் டேவிட் 23 ரன்களும் (கடைசி பந்தில் ரன் அவுட்), ஜிதேஷ் சர்மா 20 ரன்களும் அடித்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், ஹஸரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்