மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் தோனி, நூர் அகமதுவின் பந்து வீச்சில் பில் சால்ட்டை அவர் அவுட்டாக்கினார்.

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி தற்போது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
பின்னர், ஆர்சிபி அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட்டை, எம்.எஸ்.தோனி அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். முதலில் அற்புதமான ஃபார்மில் இருந்த பிலிப் சால்ட், 16 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து கலக்கி வந்தார். இருப்பினும், தோனியின் ஸ்டம்பிங்கால் 32 ரன்னில் வெளியேறினார்.
இதன் மூலம், 43 வயதான தோனி ஸ்டம்பிங் செய்வதில் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முறை இதே சேப்பாக்கம் மைதானத்தில், போட்டியின் 11வது ஓவரில் எம்.ஐ. கேப்டன் சூர்யகுமார் யாதவை தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார்.
அப்போது, தோனி 0.12 விநாடிகளில் சூர்யகுமார் யாதவை ஸ்டெம்பிங் செய்தார். இம்முறை 0.10 விநாடிகளில் ஸ்டெம்ப் அவுட்டாகி பிலிப் சால்ட் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனியின் இந்த சாதனையை கொண்டாட தொடங்கினர். தோனி ஸ்டம்பிங் செய்த காட்சிகளை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fastest Hands ⚡️@msdhoni pic.twitter.com/9NBOHxdzrL
— DHONI GIFS™ (@DhoniGifs) March 28, 2025
15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை அடித்து விளையாடிவருகிறது ஆர்சிபி அணி.