ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் விலகினார்கள். மேலும், ஹைதராபாத் அணியின் “யாக்கர் மன்னன்” நடராஜனும் வெளியேறினார்கள்.
அதுமட்டுமின்றி தனது குடும்பத்தினர் கொரோனாவுடன் போராடி வருவதால், அவர்களுக்கு உதவும் விதமான இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெங்களூர் அணியின் வீரர்களான ஆடம் ஜம்பா மற்றும் கேன் ரிச்சர்டுசன், சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனை பெங்களூர் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…