#IPL2022: ஹர்திக் பாண்டியா அரைசதம்.. பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சாஹா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் 1 ரன் மட்டுமே எடுத்து சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து மேத்யூ வேட் களமிறங்கினார். இவருடன் இணைந்து விருத்திமன் சாஹா சிறப்பாக ஆட, 16 ரன்கள் எடுத்து மேத்யூ வேட் தனது விக்கெட்டை இழக்க, ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
மத்தியில் ஆடிவந்த டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி 34 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட தொடங்கினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் தேவாதியா 2 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியாக ஆடி 19 ரன்கள் எடுக்க, 62 ரன்கள் குவித்து ஹர்திக் பாண்டியா கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி பேட்டிங் செய்யவுள்ளது.