ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும்.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள்.
இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக அடிவர, 26 ரன்கள் அடித்து ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ப்ரேவிஸ் களமிறங்க, 8 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்க, அவரையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கொர் 120-ஐ தாண்டுமா என்ற சூழல் உருவானது. அப்பொழுது சூரியகுமார் யாதவ் தனது அதிரடியாக ஆட்டத்தை காட்ட தொடங்கினார்.
18-வது ஓவரை முஹமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் சூரியகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் சூரியகுமார் யாதவ் 21 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…