ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!
விராட் கோலிக்கு எதிராக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இப்போது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக போட்டி நடைபெறும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் மைதானத்திற்குள்இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி சில விஷயங்களை பேசி உள்ளார்.குறிப்பாக விராட் கோலிக்கு எதிராக பந்து வீச தான் ஆர்வமாக இருப்பதாகவும் நாங்கள் சிறப்பாக விளையாட பயிற்சி எடுத்திருக்கிறோம் என்றும் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது ” கடந்த வருடம் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினேனோ அதைப்போலவே இந்த வருடம் விளையாடுவேன்.
முதல் போட்டியில் பெங்களூர் அணியுடன் விளையாடுவது மிகவும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் விராட் கோலிக்கு எதிராக பந்துவீச நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். எனக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்திருக்கிறார். நானும் அவருக்கு எதிராக சிறப்பாக என்னால் எப்படி விளையாடமுடியுமோ அதேயே முயற்சி செய்வேன்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய வருண் சக்கரவர்த்தி ” ஐபிஎல்லில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியைப் போலவே சிறந்தது. நாங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்ளவுள்ள அணி பெங்களூர் தான். அந்த அணியும் மிகவும் வலுவாக உள்ளது. ஆனால், நாங்களுக்கு அதற்கு தகுந்த மாதிரி பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன். எங்களுடைய அணியும் தீவிரமாக பயிற்சி எடுத்துள்ளது. எனவே, எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்” எனவும் தெரிவித்தார்.
அதன்பிறகு பேசிய அவர் சுனில் நரேன் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் சுனில் நரேனுடன் மீண்டும் இணைந்து விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அவரைப் பாராட்ட வேண்டியதில்லை. அவர் சுழற்பந்துவீச்சில் ஒரு ஜாம்பவான் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த வருடம் நாங்கள் கொஞ்சம் உரையாடினோம். அவர் பேசியதை வைத்தும் பயிற்சி எடுத்து வைத்தும் அவர் சரியான பார்மில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. அவருடைய விளையாட்டை பார்க்கவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” எனவும் வருண் சக்கரவர்த்தி தெரிவித்தார்.