ரவீந்திர ஜடேஜா நல்ல பவுலர் தான் ஆனா அதுக்கு செட்டாக மாட்டாரு! டாம் மூடி பேச்சு!

Ravindra Jadeja : உலகக்கோப்பை போட்டியில் நம்பர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜா சரியானவர் இல்லை என டாம் மூடி கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் உடைய கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பையில் தான் இருக்கிறது. உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் விளையாட தேர்வாகபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இன்னும் விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை. கண்டிப்பாக இந்திய அணியில் ரவீந்திரஜடேஜாவுக்கு இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நம்பர் 7 பேட்ஸ்மேனாக ரவீந்திர ஜடேஜா பொருத்தமாக இருப்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சிறப்பாக இருக்கிறார். நான் தேர்வாளராக இருந்தேன் என்றால் கண்டிப்பாக ஜடேஜாவை அணியில் இடம்பெற வைப்பேன். ஏனென்றால், எனக்கு நான் சிறந்த இடது கை ஸ்பின்னிங் பந்துவீச்சாளர் வேண்டும். எனவே, ஜடேஜா தான் எனக்கு தெரிந்து நல்ல தேர்வு. அவர் நாட்டின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.
ஆனால், பேட்டிங்கை பொறுத்தவரையில் ஜடேஜா தற்போது சரியான பார்மில் இல்லை. உலகக்கோப்பை போட்டியில் அவர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்தால் சரியாக இருக்காது. உலகக் கோப்பை அணியில் 7-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய அவர் போதுமானவர் என்று நான் நினைக்கவில்லை. நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியிலும் சரி இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 போட்டிகளிலும் அவர் தனது ஸ்ட்ரைக் ரேட் மூலம் அதை நிரூபித்துள்ளார்.
ஒருவேளை அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் எதாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் அவர் அந்த இடத்திற்கு சரியானவராக இருப்பார் என்று நான் சொல்வேன். அதற்காக அவர் பேட்டிங் ரொம்பவே சரியில்லை என்று நான் கூறமாட்டேன். கடைசி நேரத்தில் ஒரு சில ஓவர்களில் விளையாடவேண்டும் என்றால் அவர் சரியானவராக இருப்பார். ஆனால், திடீரென விக்கெட்கள் விழுந்தால் அணியை கொண்டு போகும் அளவிற்கு அவர் ஆட வேண்டும்” என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025