ஆஸ்திரேலிய வீரருக்கு பதிலாக களமிறங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2017- ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி தொடரில் வெர்சாஸ்டர் ஷைர் அணிக்காக விளையாடினர்.
அவர் விளையாடிய நான்கு போட்டிகளில் 20 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் . இந்நிலையில் இந்த ஆண்டு கவுண்டி தொடரில் இங்கிலாந்து நாட்டின் நாட்டிங் காம்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.அந்த அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் விலகியதை தொடர்ந்து அஸ்வின் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது பற்றி கூறுகையில் ,கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் விளையாட காத்து கொண்டு இருக்கிறேன். மேலும் இதற்கு முன் நடந்த தொடரில் ரசித்து விளையாடினேன் என கூறினார்.
ஜூன் மாத இறுதியில் இந்த தொடரில் விளையாட உள்ளார் .இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியின் துணை கேப்டன் ரஹானே ஏற்கனவே இந்த தொடரில் ஹாம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.