ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவும் 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ரன்கள் அடித்து பஞ்சாபி அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 108 ரன்களும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதிக சிக்சர்கள் அடித்த போட்டி என்ற சிறப்பையும் பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் இரண்டு அணி பந்துவீச்சாளர்களும் மிகவும் தண்டிக்கப்பட்டனர்.

எப்படி பந்துவீசுனாலும் பந்துகள் நாலாபுறமும் பறந்தது. இப்போட்டி மட்டுமின்று ஐபிஎல் தொடரிலேயே இப்படி தான் இருக்கிறது. சர்வ சாதாரணமாக குறைந்தபட்சம் 200 ரன்களை குவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இம்பேக்ட் பிளேயர் ரூல், சிறிய பவுண்டரி லைன், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் என்றே கருதுகின்றனர். இதனால் பவுலர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 7வது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. எனவே,  பவுலர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையே ஒரு சமநிலை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்கள் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பதிவில், தயவு செய்து பவுலர்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதில் SOS என்ற எமர்ஜென்சி குறியீடையும் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

47 minutes ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

2 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

2 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

3 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

3 hours ago

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…

4 hours ago