ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது.
இந்த சவாலான நேரத்தில் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும்போது அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு வாரியம் கோருகிறது.
வாரியமும் ,அணியும் அஷ்வினுக்குத் தேவையான எந்த உதவியையும் தொடர்ந்து அளிக்கும் என்றும் அவருடன் தொடர்பில் இருக்கும் என கூறியுள்ளது.
இந்த முக்கியமான காலகட்டத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் புரிதல் மற்றும் அனுதாபத்தை இந்திய அணி பாராட்டுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.