ஜெய்ஸ்வால் பற்றிய கேள்விக்கு அஸ்வின் கொடுத்த ‘நச்’ பதில்.!

Published by
மணிகண்டன்

ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார்.  இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும்.

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக விளையாடுவார் என தெரிகிறது. இது குறித்து , முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஜெய்ஸ்வால்,உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார். அவர் வெளிநாட்டு கிரிக்கெட் மைதானங்களில் எவ்வாறு செயல்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது பேசிய அஸ்வின்,  இந்தியாவில் உள்ள கிரிக்கெட் நிபுணர்களுக்கு நன்றி. அவர்களின் பெரிய பணிகளுக்கு முன் இளம் வீரர்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசித்து உள்ளனர் அதற்காக நன்றி.

இது ஜெய்ஸ்வால் விளையாட்டு அனுபவத்தின் ஒரு பகுதி மட்டுமே. இந்த கேள்வி எனக்கு சிரிப்பை வரவைக்கிறது. இந்தியாவில் சிறப்பாக விளையாடிய ஒருவர் வெளிநாடுகளில் எவ்வாறு செயல்படுவார் என் கேட்கிறீர்கள். காத்திருங்கள், ஆஸ்திரேலியா மட்டுமல்லாது , தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்திலும் அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் அதை வேடிக்கை மட்டுமே காண போகிறேன்.

ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படலாம் அல்லது செயல்படாமல் இருக்கலாம். ஆனால், அது அவருக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். எங்கும் பயணம் செய்யலாம். எங்கும் விளையாடலாம். இறுதியில், ஒரு கிரிக்கெட் வீரரின் மனப்பான்மை என்பது தனது அணி வெல்ல வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். அதுவே அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும்

ஜெய்ஸ்வால் உண்மையில் பயிற்சியின் போது சிறப்பாக பந்தை எதிர்கொள்கிறார். அவர் தொட்டதெல்லாம் தங்கமாகும் அதிர்ஷ்டக்காரர் என்றும் ஜெய்ஸ்வால் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் , மைக்கேல் வாகன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசினார்.

ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவருமே , தற்போது ஐபிஎல் 2024இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

Recent Posts

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

17 minutes ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

37 minutes ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

44 minutes ago

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

1 hour ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

3 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

3 hours ago