தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. – தோனி குறித்து பல்வேறு கருத்துக்களை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘ தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர். விளையாட்டில் சிறந்து விளங்கிய நபர்களில் ஒருவர் தோனி. ‘
‘ அவர் விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் கோப்பைகள் என அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ‘
‘ தோனி தன்னை சிறந்த விக்கெட் கீப்பராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். அவர் ஸ்டம்பிங் செய்யும் வேகம் அபாரமானது. அவர் ஸ்டம்பிங் செய்து, பெயில்ஸை தட்டி விட்டது சில சமயம் பேட்ஸ்மேனுக்கு கூட தெரியாது. அந்தளவிற்கு தோனியின் ஸ்டம்பிங் வேகமானது.’
‘ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை ஓர் சிறந்த பினிஷராக உருவாக்கி கொண்டார் தோனி. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் தோனி சிறப்பானவர்’ என ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் தோனி பற்றிய நினைவுகள் குறித்து சிலாகித்துள்ளார்.
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…