ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா.? கூகிளில் அதிர்ச்சி.!

Published by
கெளதம்
கூகிளில் ‘ரஷீத் கான் மனைவி’ என்று தேடும்போது அனுஷ்கா சர்மா பெயரை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷீத் கானின் மனைவி யாரென என்று தேடினால், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பெயரை கூகிள் காட்டுகிறது. ஆனால், எந்த அளவிற்கு இது உண்மை என்பதை பார்ப்போம்.
பாலிவுட் நடிகை, அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி இது அனைவரும் அறிந்ததே. அனுஷ்கா சர்மா 3 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அனுஷ்கா சர்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கூகுளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் மனைவி யாரென தேடினால் அனுஷ்கா சர்மாவின் பெயரை கூகுள் காட்டுகிறது. அவரது பெயருக்குப் பிறகு, திருமணமானவர் என்று எழுதப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மனைவியின் பெயர் அனுஷ்கா சர்மா என்றும் கூகிள் காட்டுகிறது. திருமண தேதியை பொறுத்தவரையில்,  கோலியுடனான திருமண தேதியான 11, 2017 என்று காண்பித்துள்ளது.

ரஷீத் கான் மனைவி என்று தேடினால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் ஏன் தோன்றுகிறது?

அதாவது, ரஷீத் கான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது உங்கள் விருப்பமான பாலிவுட் நடிகை யார் என்று கேட்கப்பட்டது,  அதற்கு அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரீத்தி ஜிந்தா என்று ரஷீத் தெரிவித்திருந்தார். அதன்பின், இது சர்ச்சை செய்தியாக உருவெடுத்து தொடர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் ரஷீத் கான் ஆவேசமடைந்தார். இதுவே இவர்களுக்கு இடையேயான தொடர்பு என்பதாகும்.

இதனால் தான் கூகிள் அனுஷ்கா ஷர்மாவை ரஷீத் கானின் மனைவியாகக் காட்டுகிறது. ஆனால் இதில் துளிக்கூட உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் ரஷீத் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதே குறிபிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

4 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

6 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

7 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

7 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

8 hours ago