பிபிஎல் தொடரில் விலகிய ரஷித்கான்..!
ரஷித் கான் விலகல்:
ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் லீக் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் விலகியுள்ளார்.
பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பிபிஎல்லின் 13-வது சீசன் டிசம்பர் 7 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த நவம்பர் 10 அன்று ரஷித் கான் தனது கடைசி போட்டியில் விளையாடினார். ரஷித் உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளுடன் 105 ரன்கள் எடுத்தார்.
பிபிஎல்லில் 98 விக்கெட்டு:
ரஷித் கான் கடந்த 2017 முதல் பிபிஎல்லில் விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 69 போட்டிகளில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.