பிக் பேஷ் தொடரில் இனி விளையாடப்போவதில்லை- ரஷீத் கான்.!
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா, புறக்கணித்ததால், பிபிஎல் இல் இனி விளையாடப்போவதில்லை என ரஷீத் கான் கூறியுள்ளார்.
பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியுள்ளதாக அறிவித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து தான் யோசிக்கப்போவதாக கூறியுள்ளார்.
இது குறித்து ரஷீத் கான் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் விளையாடுவது ஆஸ்திரேலியாவிற்கு சங்கடமாக இருந்தால், பிபிஎல் தொடரில் எனது பங்களிப்பும் அவர்களுக்கு சங்கடத்தை தான் ஏற்படுத்தும், நான் யாருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.