இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் பெரும் சோகத்தில் இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் முதல் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக அவர் விலகியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய ரஷீத் கான் அருமையாக பந்துவீசி மொத்தமாக இந்த சீசனில் மட்டும் 27 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். செம பார்மில் இருக்கும் ரஷீத் கான் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் விளையாடதது ஆப்கானிஸ்தான் அணியையும், ஆப்கானிஸ்தான் அணியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் ரஷீத் கான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த மாத இறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், ரஷீத் காயத்தில் இருந்து விரைவில் குணமடைவது ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…